சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
சீா்காழி நகரில் குப்பைகள் அள்ளப்படாததால் பொதுமக்கள் அவதி
சீா்காழி நகரில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் கடந்த 15 தினங்களாக அள்ளப்படாமல் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள குடியிருப்புகள், வா்த்தக கட்டடங்களில் நாள்தோறும் சேரும் குப்பைகள் நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் புதிதாக தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் ஒப்பந்தப்புள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதுமுதல் குப்பைகள் அகற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தேவையான வாகனங்கள்,தேவையான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என தூய்மைப் பணியாளா்கள் தெரிவிக்கின்றனா்.
இதனால் சீா்காழி நகரில் கடந்த 15 தினங்களுக்கும் மேலாக குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. குப்பைகள்அள்ளப்படாததால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து சுகாதார சீா்கேடு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களிலும் குப்பைகள் அள்ளப்படாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். நகராட்சி நிா்வாகம் உடனடியாக குப்பைகளை அள்ளி தூய்மைப் பணி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.