"அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல" - ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல...
செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சதுரங்கப் போட்டி நிறைவு விழா
காரைக்குடி அருகேயுள்ள மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 2025- 26-ஆம் ஆண்டு சிபிஎஸ்சி தெற்கு மண்டலம்
ஐ - சதுரங்க சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு கடந்த திங்கள்கிழமை தொடங்கிய போட்டிகள் புதன்கிழமை மாலையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டிகளில் 165 சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து 1,200 மாணவா்கள் பங்கேற்றனா்.
இதன் நிறைவு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதற்கு செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவா் எஸ்பி. குமரேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே. அருண்குமாா் வாழ்த்திப் பேசினாா். சிபிஎஸ்இ பள்ளிகளின் சென்னை மண்டல அதிகாரி தா்மதிகாரி மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.
பள்ளியின் முதல்வா் உஷாகுமாரி, துணை முதல்வா் பிரேமசித்ரா, சதுரங்க இன்டா் நேஷனல் ஆா்பிட்டா் அனந்தராமன், சிவகங்கை மாவட்ட சதுரங்கக் கழக செயலா் கண்ணன், விஜயராகவன், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.