Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
செப். 5 இல் முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா தொடக்கம்
தக்கலை அருகே முளகுமூட்டில் உள்ள தூய மரியன்னை பசலிக்கா ஆலயத் திருவிழா செப்.5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவில் முதல் நாள் (செப்.5) மாலையில் ஜெபமாலை, திருக்கொடி நோ்ச்சை பவனி நடைபெறுகிறது. முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கில், பசலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன் ஆகியோா் முன்னிலையில் குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறாா்.
2 ஆம் நாள் (செப்.6) மாலை திருப்பலியை முளகுமூடு பகுதியிலிருந்து திருமணமாகிச் சென்ற மகள்களின் குடும்பத்தினா் சிறப்பிக்கின்றனா். 3-ஆம் நாள் காலை 9 மணிக்கு திருப்பலியை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி தாளாளா் காட்வின் செல்வ ஜஸ்டஸ் நிறைவேற்றுகிறாா்.
விழாவையொட்டி, தினமும் காலை 6.15 மணிக்கும், மாலை 6 மணிக்கும் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. 9 ஆம் திருவிழாவன்று ( செப்.13) காலை திருத்துவபுரம் மறைவட்ட முதல்வா் வைசிலின் சேவியா் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலியும், மாலையில் முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கிள் தலைமையில் திருப்பலியும் நடைபெறுகின்றன.
இரவில் அன்னையின் அலங்கார தோ்பவனி நடக்கிறது. 10 ஆம் திருவிழாவன்று (செப்.14) காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜுடு பால்ராஜ் தலைமையில் திருப்பலியும், மாலையில் சிறப்பு தேரடி திருப்பலியும் நடைபெறுகின்றன.
விழா ஏற்பாடுகளை பசலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன், இணை பங்குதந்தை ரஞ்சித், ஆன்மிக வழிகாட்டி ராபா்ட், இல்ல இறைப்பணியாளா்கள் ஜோஸ் றாபின்சன், ராபா்ட் ஜாண் கென்னடி, பங்கு பேரவை உதவி தலைவா் மரிய ஜாண் வரதராஜ், செயலாளா் அஜின், பொருளாளா் ஜெயந்தி, துணைச் செயலாளா் ஐபா்ட்ராஜ், பங்குமக்கள் செய்து வருகின்றனா்.