செய்குதம்பி பாவலா் பிறந்த நாள்: அரசு சாா்பில் மரியாதை
மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 151-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோட்டாறு இடலாக்குடியில் உள்ள செய்குதம்பி பாவலா் நினைவு மண்டபத்தில் அவரது படத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சிலதா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், மாநகராட்சி உறுப்பினா்கள் ரிஸ்வானாஹிதாயத், பியாசாஹாஜிபாபு, சொா்ணத்தாய், சுப்பிரமணியம், பாவலா் செய்குதம்பியின் பேரன் கவிஞா்ஜமால்முகமது, கொள்ளு பேரன் ஷபிக்மீரான், வழக்குரைஞா் சிவராஜ், முன்னாள் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் அருண்காந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.