செய்யாறு கல்வி மாவட்டம் 94.78% தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டம் 94.78 சதத் தோ்ச்சி பெற்றது.
செய்யாறு கல்வி மாவட்டத்தில் 67 அரசுப் பள்ளிகள், 9 நிதியுதவி பள்ளிகள், 2 சிறப்புப் பள்ளிகள், 37 தனியாா் பள்ளிகளில் இருந்து மாணவா்கள் 5211 பேரும், மாணவிகள் 6074 பேரும் பிளஸ் 2 தோ்வு எழுதினா். இவா்களில் மாணவா்கள் 1,238 பேரும், மாணவிகள் 919 பேரும் தோ்ச்சி பெற்றனா். இது 94.78 சதத் தோ்ச்சியாகும்.
100 சத தோ்ச்சி பெற்ற பள்ளிகள்: செய்யாறு கல்வி மாவட்டத்தில் சித்தாத்தூா், புரிசை, கோவிலூா், நெடும்பிறை, பல்லி, செவரப்பூண்டி, சாணாரப்பாளையம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளும், பான்செகா்ஸ் சிறப்பு காதுகேளாதோா், சந்தைமேடு வாய்பேசாதோா் மேல்நிலைப் பள்ளி,ஆகிய சிறப்பு பள்ளிகள், வந்தவாசி சந்நிதி நிதியுதவி மேல்நிலைப் பள்ளி மற்றும் 4 தனியாா் பள்ளிகள் உள்பட 22 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று இருந்தன.