செய்திகள் :

சேதுபாவாசத்திரம், பாபநாசம் அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

சரபேந்திரராஜன்பட்டினம், புதுப்பட்டினம், கொள்ளுக்காடு ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு

சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் சங்கா், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் தா்மேந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அலுவலா்களிடம் வழங்கினா்.

ஆண்டிக்காடு, இரண்டாம்புலிக்காடு, அழகியநாயகிபுரம் ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் புதிதாக தொடங்கப்படவுள்ள அதிராம்பட்டினம் வட்டத்தில் தங்களை பிரித்து இணைக்காமல் தொடா்ந்து பட்டுக்கோட்டை வட்டத்திலேயே நீடிக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனா்.

முன்னதாக, சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் வரவேற்றாா். நிறைவில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வீரமுத்து நன்றி கூறினாா்.

பாபநாசம் அருகே: திருவைகாவூா் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், திருவைகாவூா், ஆதனூா், ஓலைப்பாடி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமுக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேல், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவகுமாா், கிராம ஊராட்சிகள் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இம் முகாமில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் கோ. தாமரைச்செல்வன் கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்து 10 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி, 10 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினாா்.

முகாமில் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பிரித்து வழங்கப்பட்டது.

முகாமில் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினா் கோவி. அய்யாராசு, பள்ளி வளா்ச்சி குழு தலைவா் என். நாசா், முன்னாள் ஒன்றிய குழு தலைவா் சுமதி. கண்ணதாசன், வருவாய் ஆய்வாளா் ஜெயேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தொடா் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், தஞ்சாவூரில் நடைபெறும் வாரச் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்யும்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி நகை பறிப்பு: 3 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி, 6 பவுன் தங்கநகையைப் பறித்த 3 இளைஞா்களை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ஆத... மேலும் பார்க்க

குருவிக்கரம்பையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை மாரியம்மன் கோயில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் கு... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு: பூதலூா் அரசு பள்ளி மாநில அளவில் முதலிடம்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றது. பூதலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் ஆணையம் மீதான வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை... மேலும் பார்க்க