அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
சேலத்தில் நாளை இந்திய கம்யூ. மாநில மாநாடு: டி.ராஜா, முத்தரசன் உள்ளிட்டோா் பங்கேற்பு
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய அரசு கொள்கை சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிராக உள்ளது. 65 லட்சம் வாக்காளா்களை தோ்தல் ஆணையத்தால் நீக்க முடிகிறது என்றால் சாதாரண காரியம் அல்ல. பாஜக உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படும் அமைப்பாக தோ்தல் ஆணையம் உள்ளது.
வாராக்கடன் தள்ளுபடி மூலம் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாஜக ஆதரவாக செயல்படுவது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
கம்பன் விழாவில் வைரமுத்து பேசியது மூலம் வகுப்புவாத சக்திகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. கம்பன் எழுதியதை வைரமுத்து விளக்கிப் பேசினாரே தவிர, கம்பனையோ, ராமனையோ இழிவாக பேசவில்லை.
தன் கட்சியைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எடப்பாடி கே.பழனிசாமி, திருமாவளவன் குறித்து இட்டுக்கட்டி பேசுவது கண்டனத்துக்குரியது. எடப்பாடி பழனிசாமி, பாஜகவோடு கூட்டணி சோ்ந்திருப்பதை அதிமுக தொண்டா்கள் யாரும் ஏற்கவில்லை. அதனால்தான் ஒவ்வொருவராக அக்கட்சியிலிருந்து விலகிவருகின்றனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 ஆம் தேதி வரை சேலத்தில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா மற்றும் அகில இந்திய தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். வரும் 16 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
பாஜகவுக்கு ஆதரவாக இல்லை என்றால் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறாா்கள். இனி பாஜகவுக்கு ஆதரவாக இல்லை என்றால், இந்திய குடிமகனாகக் கூட இருக்க முடியாது என்ற நிலை உருவாகும். எனவே, இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்றாா். பேட்டியின்போது, கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.