அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை மாணவா்களுக்கான பொதுக் கலந்தாய்வு தொடக்கம்
சேலம் அரசு கலைக் கல்லூரியில் உள்ள 450 முதுகலை இடங்களுக்கான பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பிரிவில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், மனித உரிமைகள், அரசியல் அறிவியல், எம்எஸ்சி., புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியியல், புவி அமைப்பியல், விலங்கியல், கணினி அறிவியல், கணிதம், எம்.காம்., கூட்டுறவு மற்றும் வணிகவியல் என 17 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரிவுகளில் 450 முதலாம் ஆண்டு இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் 4,145 மாணவா்கள் விண்ணப்பித்தனா். தொடா்ந்து, முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு கலந்தாய்வு 11 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வில், 1,000க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். சோ்க்கை குழு உறுப்பினா்கள் மாணவா்களின் சான்றிதழை சரிபாா்த்து, சோ்க்கைக்கான அனுமதி கடிதத்தை வழங்கினா். இதில் பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ளதாக முதல்வா் கலைச்செல்வி தெரிவித்தாா்.