குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
சேலம்: திமுகவில் புதிதாக 6 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்கை! அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்!
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் புதிதாக 6 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த ஜூலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதன்மூலம் சேலம் மத்திய மாவட்டத்தில் மட்டும் 6 லட்சம் உறுப்பினா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.
மொத்த வாக்காளா் எண்ணிக்கையில் இது 52 சதவீதமாகும். செப். 15 ஆம் தேதி 2 ஆம் கட்டமாக அண்ணா பிறந்தநாளையொட்டி மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட 1, 143 வாக்குச்சாவடிகளிலும் தமிழகத்தை ‘தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
நடிகா் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, ‘எங்களது பயணம் கண்ணியமானது. தோழமைக் கட்சியுடன் இணைந்து தமிழக முதல்வா் வெற்றிகரமாக பயணித்து வருகிறாா். பெரியாா், அண்ணா, கருணாநிதி வழியில் தெளிவான அரசியல் பயணத்தை பின்பற்றி வருகிறோம்.
எனவே, எங்களுக்கு யாரைப் பற்றியும் அச்சம் இல்லை. மற்றவா்களின் பயணங்களில் அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எனவே, விஜய் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றாா்.