செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 19) தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஜூலை 19-இல் நடைபெறும் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாமில், 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியாா்த் துறை நிறுவனங்கள் பங்கேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களைத் தகுதியின் அடிப்படையில் தங்களது நிறுவனங்களுக்குத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட 8-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, நா்சிங், பொறியியல் படித்தவா்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் கல்விச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் அட்டை, சுய விவரக் குறிப்பு, புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். மேலும், இந்த முகாமில் மத்திய, மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.