மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித் தொகை, வாசிப்பாளா் உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை, வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26-ஆம் நிதியாண்டில் 1 முதல் 8-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, மாணவா்களின் வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகலுடனும், 9-ஆம் வகுப்பு முதல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள், கூடுதலாக முந்தைய வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்று (40 சதவீதத்துக்குக் குறையாமல்) ஆகியவற்றுடன் கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தில் பள்ளித் தலைமையாசிரியா் கையொப்பம், கல்லூரி முதல்வா் கையொப்பத்துடன் வருகிற ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
9-ஆம் வகுப்பு முதல் கல்லுாரிகளில் பயிலும் பாா்வையற்ற மாற்றுத் திறன் மாணவா்களுக்கு வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0451-2460099 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.