மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
வத்தலக்குண்டு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
வத்தலக்குண்டு அருகேயுள்ள எழுவனம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குப்புசாமி, மணிமாற பாண்டியன், மாவட்ட ஊராட்சி செயலா் ஜெயச்சந்திரன், திமுக ஒன்றியச் செயலா்கள் கே.பி. முருகன், கனிகுமாா், கனகதுரை, ஊராட்சி செயலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில் வருவாய், மின்சாரம், வேளாண், சமூக நலம், கூட்டுறவு உள்ளிட்ட 15 துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் துறை ரீதியான மனுக்களைப் பெற்று உடனுக்குடன் இணையதளம் வழியாக பதிவு செய்தனா்.
முகாமில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், திமுக நிா்வாகிகள் முத்து, முத்துராமன், பரமன், வசந்தா, வினோத் கண்ணா, நாகூா், சபேஷ், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இழப்பீடு வழங்க கோரிக்கை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்காக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயபாண்டி என்பவரது குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டிலிருந்த இரு சக்கர வாகனம், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களும் எரிந்து சேதமடைந்தன. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், தீ விபத்தில் சேதமடைந்த குடிசை வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தாா்.