``டிரம்ப் கொடுத்த நெருக்கடி'' - பதவியேற்றதும் நாடாளுமன்றத்தை கலைப்பது ஏன்? கனடா பிரதமர் விளக்கம்!
ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பின், கனடா பிரதமராக மார்க் கார்னே பதவியேற்று கிட்டதட்ட 10 நாள்கள் தான் ஆகியுள்ளது. அதற்குள், அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார்.
கனடாவின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும் அக்டோபர் மாதம் தான் நடக்க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த முடிவு?
இந்த முடிவு குறித்து கார்னே, "இதுவரை நாம் சந்திக்காத நெருக்கடியை இப்போது நாம் சந்தித்து வருகிறோம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியாயமில்லாத வணிக நெருக்கடிகளை நமக்கு கொடுத்து வருகிறார். இது கனடா நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வண்ணம் உள்ளது.
கனடாவை கட்டமைத்தல், கனடாவை ஒன்றிணைத்தல், கனடாவில் முதலீடு செய்தல் - இப்படி கனடாவை பாதுகாக்க நாம் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
அதற்கு சக கனடா மக்களிடம் பலமான மற்றும் பாசிட்டிவான உத்தரவு வேண்டும் என்று வேண்டுகிறேன்.
அதனால் தான், கனடா கவர்னரிடம் நாடாளுமன்றத்தை கலைத்து, வரும் ஏப்ரல் 28-ம் தேதி தேர்தலை நடத்த கேட்டுக்கொண்டேன். அவரும் ஒத்துக்கொண்டார்" என்று கூறியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
