முசோலினி vs Hitler-ன் சண்டைக்கு காரணம் இதுதானா? | Mussolini Web series #18
டிராகன் டிரைலர் தேதி!
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். லவ் டுடே மூலம் பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க கல்லூரி காதல் கதையாக உருவான இதில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் பிரதான வேடங்களி்லும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: காதலர் நாளன்று வெளியாகும் திரைப்படங்கள்!
டிராகன் திரைப்படம் பிப். 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (பிப். 10) மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.