ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
டிராக்டா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
சின்னசேலம் அருகே டிராக்டா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட கிழக்கு பைத்தந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னம்மாள் (70). இவா், சனிக்கிழமை மாலை பைத்தந்துறை கிராமத்தில் இருந்து செட்டியந்தாங்கள் கிராமத்துக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
கிழக்கு பைத்தந்துறை பேருந்து நிலையம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த டிராக்டா் மூதாட்டி மீது மோதியது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநரான நல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.