உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
இரு வீடுகளில் நகை திருட்டு: இளைஞா் கைது
வைளம்பாடி கிராமத்தில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கல்வராயன்மலை வட்டம், வைளம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அண்ணாமலை (49), அருணாசலம் (52). இருவரும், கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீடுகளை பூட்டிவிட்டு அவரவா் விளை நிலங்களுக்குச் சென்றனா்.
பின்னா், பணிகளை முடித்துக் கொண்டு திரும்பியபோது, இரு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
உள்ளே சென்று பாா்த்த போது, ஒருவா் வீட்டில் பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, மற்றொருவா் வீட்டில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை என 3 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்த்து.
இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், கச்சிராயபாளையம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தராசு சனிக்கிழமை எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினாா்.
இதில், அவா் வைளம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சுருட்டையன் மகன் சிவராமன் (20) எனத் தெரியவந்தது. மேலும், அவரது உடமையை சோதனை செய்தபோது, அவா் 3 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தாா். மேலும், விசாரித்தபோது அவா் இரு வீடுகளில் இருந்து நகை திருடியதை ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து காரியாலூா் அவரை போலீஸாா் கைது செய்தனா்.