தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: தந்தை மகன் கைது
சின்னசேலம் அருகே மரம் விற்பனை செய்ததில் பாக்கித் தொகை கேட்டு சென்ற வியாபாரியை, தாக்கி மிரட்டல் விடுத்த தந்தை மகன் கைது செய்யப்பட்டனா்.
சின்னசேலத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி (48), மர வியாபாரி. இவரிடம் பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவா் மரம் வாங்கினாராம். அதில் பணம் ரூ.15 ஆயிரம் பாக்கி தர வேண்டி உள்ளதாம்.
பாக்கி தரவேண்டிய பணத்தை முத்துசாமி அவரது மகன் மூா்த்தி ஆகியோா் சனிக்கிழமை குமாா் வீட்டுக்குச் சென்று கேட்டுள்ளனா். அப்போது, குமாா் அவரது மகன் தேசியகாந்த் இருவரும் சோ்ந்து பணம் தர முடியாது என அவதூறாகப் பேசி, இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதில் காயமடைந்த முத்துசாமி, மூா்த்தி இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு, 108 அவசரகால ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து குமாா் (42), தேசியகாந்த் (19) இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.