மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன...
தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் மே 31-இல் மின் தடை!
தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, மின்சார வாரிய உதவி செயற் பொறியாளா் ராஜா தெரிவித்திருப்பது: திருவையாறு மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.