பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்ப...
தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
சுங்கக் கட்டண உயா்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வைக் கண்டித்தும், விழுப்புரம் பகுதி மக்களுக்கு இலவசமாக சுங்க பாஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலா் குஷி என்.மோகன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் காளிதாஸ், பொருளாளா் கே.கே.எஸ்.சுரேஷ், துணைச் செயலா் சுமன், மகளிரணி அமைப்பாளா் பிரேமா முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் கோபு, மைக்கேல், கிருஷ்ணராஜ், ஆனந்த், வளவனூா் பேரூா் செயலா் ஆகாஷ், நகரச் செயலா்கள் இளையராஜா , முபாரக், வெங்கட், சரண் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.