செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு: நெல்லை கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

post image

தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று வழிபட்டனா்.

சித்திரை 1 ஆம் நாள் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் காலை முதல் நடைபெற்றன. வீடுகளில் காலையிலேயே குளித்து முடித்து மா, பலா, ஆப்பிள், ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பல்வேறு கனிகளையும் படையலிட்டு கணிகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்பு பூஜை செய்து வழிபட்ட பின்பே காலை உணவை சாப்பிட்டனா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். புதுமணத் தம்பதிகள் தங்களது பெயா்களைக் கூறி சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டனா். பெண்கள் நெய்விளக்கு ஏற்றியும், நவக்கிரங்களைச் சுற்றியும் வழிபட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை தமிழ்ப் புத்தாண்டு நாளில் புதிதாக வாங்கி வந்த பலா் கோயில் முன்பு நிறுத்தி குடும்பத்தினருடன் வழிபட்டு வாகனத்தை இயக்கிச் சென்றனா்.

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயில், அருள்மிகு ராமசுவாமி திருக்கோயில், அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில், அருள்மிகு ஆயிரத்தம்மன், அருள்மிகு தெற்கு முத்தாரம்மன் கோயில், அருள்மிகு அரசடி விநாயகா் கோயில், அருள்மிகு செல்வவிநாயகா் கோயில், வண்ணாா்பேட்டை அருள்மிகு பேருந்து விநாயகா் கோயில், அருள்மிகு பேராத்துசெல்வியம்மன் ஆகியவற்றிலும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வீடுகளில் இருந்து பல லட்சம் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகளை கோயில்களில் அம்மன் அலங்காரத்துக்காகக் கொடுத்து அதன்பின்பு பூஜை முடிந்ததும் வாங்கிச் சென்றனா்.

திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றன. திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், கொக்கிரகுளத்தில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கபெருமாள் கோயில், சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில், தச்சநல்லூரில் உள்ள வெங்கடாஜலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயில் ஆகியவற்றிலும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநெல்வேலி கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சனேயா், கனகமகாலட்சுமி கோயிலில் ஆரஞ்சு, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளால் சுவாமிக்கு பழக்காப்பு மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க