பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
தவறவிடப்பட்ட கைப்பேசி மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
திருச்சி அருகே சாலையில் தவறவிடப்பட்ட கைப்பேசி மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காட்டுப்புத்தூா் ஆண்டாபுரம் செல்லும் சாலையிலுள்ள காந்தி நகரைச் சோ்ந்த தங்கவேல் மகள் பவித்ரா (24). இவரும் இவரது தாயும் செவ்வாய்க்கிழமை மாலை அத்தனூா் அம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்றனா். அப்போது, பவித்ரா தனது கையில் வைத்திருந்த சுமாா் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசியை தவறவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுப்புத்தூா் காவல் ஆய்வாளா் சங்கா், போலீஸாா் சதீஷ், ராஜாசுதாகா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று, சோதனை மேற்கொண்டு கோயில் பகுதியில் கீழே கிடந்த கைப்பேசியை மீட்டு பவித்ராவிடம் ஒப்படைத்தனா்.
புகாா் அளித்த சில மணி நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைப்பேசியை மீட்டு ஒப்படைத்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.