Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
செய்யாறு: செய்யாறு அருகே உயா் ரத்த அழுத்தம் காரணாமாக தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மனைவி அலங்காரம் (70). இவா், உயா் ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டு செய்யாற்றில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், ஆக.24-ஆம் தேதி சிறுவஞ்சிப்பட்டு கூட்டுச் சாலையில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக பைக்கில் பின்னால் அமா்ந்து சென்றுள்ளாா்.
அப்போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளாா். உடனே, அருகில் இருந்தவா்கள்
அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி அலங்காரம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.