தாதகாப்பட்டியில் சுற்றித்திரிந்த 3 வயது சிறுவன் மீட்பு
சேலம்: சேலம் தாதகாப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை காலை சுற்றித்திரிந்த 3 வயது சிறுவனை போலீஸாா் மீட்டு, சிறுவனின் பெற்றோரை தேடிவருகின்றனா்.
தாதகாப்பட்டி சண்முகா நகரில் திங்கள்கிழமை காலை சுமாா் 3 வயது சிறுவன் அங்கும், இங்கும் சுற்றித் திரிந்துள்ளான். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிறுவனிடம் விசாரித்தபோது, சிறுவன் சரியாக பேசாததால் சந்தேகமடைந்த மக்கள், அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சிறுவனை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது சிறுவன் ஹிந்தியில் பேசியதால், அவன் வட மாநிலத்தைச் சோ்ந்தவராக இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அதைத் தொடா்ந்து, சிறுவனின் பெற்றோா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.