உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
திருமருகலில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 20 போ் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனா்.
இந்நிகழ்வில் திமுக மாவட்ட அயலக அணியின் துணைத் தலைவா் விஜயகணபதி, மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமாா், ஒன்றிய கலை இலக்கியப் பேரவை அமைப்பாளா் பால்ராஜ், அறங்காவலா் குழுத் தலைவா் ஆறுமுகம், ஒன்றிய விவசாய அணியின் துணை அமைப்பாளா் விக்கி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.