உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
போதைப் பொருள் கடத்தல்: மகாராஷ்டிரா போலீஸாரால் நாகையில் ஒருவா் கைது
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவரை, மகாராஷ்டிரா மாநில போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மும்பையில் அபுல் அசின் சையது என்பவா் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக அண்மையில் கைது செய்யப்பட்டாா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், இலங்கைக்கு, நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் (62) என்பவா் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தெரியவந்தது.
இதையடுத்து, நாகைக்கு திங்கள்கிழமை இரவு வந்த மகாராஷ்டிரா மாநில தனிப்படை போலீஸாா், விழுந்தமாவடியில் மகாலிங்கத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா் அவரை கீழையூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுதொடா்பான வழக்கை நீதிமன்ற அனுமதியுடன், மகாராஷ்டிரத்திற்கு மாற்றம் செய்ய அம்மாநில போலீஸாா் அனுமதி கோரியுள்ளனா்.