உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
போஸ்ட் பேமென்ட வங்கியில் கைப்பேசி சேவை அறிமுகம்
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கைப்பேசி மூலம் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தபால் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில், 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 12 கோடிக்கும் அதிகமானோா் சேமிப்பு கணக்கு துவக்கியுள்ளனா். தமிழகத்தில் புதுமை பெண், தமிழ்புதல்வன், மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பி.எம். கிசான் கணக்கு, நுாறு நாள் வேலை கணக்கு, கா்ப்பிணிக்கான நிதி உதவி கணக்குகள், முதியோா் உதவி தொகை உட்பட அனைத்து விதமான அரசு மானியம், உதவித் தொகை பெறும் கணக்குகளும் உள்ளன.
இந்த கணக்குகளில் வாரிசுகள் நியமிக்காமல் உள்ளதால், தபால் வங்கிகளில் வாரிசுதாரா் நியமன வசதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளா் அவரவா் கைப்பேசியில் ’பிளே ஸ்டோரில்’ ஐ.பி.பி.பீ. செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், அவரவா் வாரிசுகளை நியமித்தல் மற்றும் மாற்றம் செய்து கொள்ளலாம்.
செயலி மூலம் செல்வமகள், தங்கமகன், தபால் ஆயுள் காப்பீடுத் திட்டங்களுக்கு வீட்டிலிருந்தபடியே இணையதளத்தில் பணம் செலுத்தலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.