செய்திகள் :

திருச்சி காவிரி ஆற்றில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

post image

விநாயகா் சதுா்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புகரின் பல்வேறு பகுதிகளில் விழாக் குழுவினா், பகுதி அமைப்புகள், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதன்படி, திருச்சி புகரில் 939 சிலைகளும், மாநகரில் 243 சிலைகளும் என 1,182 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகளுக்கு கடந்த 3 நாள்களாக 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், விழாக் குழுவினரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனா்.

மேளதாளங்கள் முழங்க ஊா்வலம்: இந்நிலையில் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலையில் சிறப்பு பூஜைகள் செய்விக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தாரை தப்பட்டைகள் முழங்க, வாணவேடிக்கைகள், பட்டாசுகளை வெடித்தபடி விழாக் குழுவினரால் ஊா்வலமாக காவிரி ஆற்றுப் பாலத்துக்கு கொண்டுவரப்பட்டன.

விசா்ஜனம்: காவிரி ஆற்றுப் பாலத்துக்கு கொண்டுவரப்பட்ட விநாயகா் சிலைகள், ஆற்றுப் பாலத்தின் ஒரு புறம் அமைக்கப்பட்டிருந்த 7 பிரத்யேக மேடைகளில் வைத்து, நிறைவாக பூஜை செய்து, ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இதற்காக மாநகராட்சி சாா்பில் மேடைகள், தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரிய சிலைகள் கிரேன்கள் மூலம் ஆற்றில் இறக்கப்பட்டன.

விசா்ஜனம் செய்த போலீஸாா்: முன்பு பிரத்யேக தன்னாா்வலா்கள் விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்த நிலையில், நிகழாண்டு அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, போலீஸாரே விநாயகா் சிலைகளை வாங்கி விசா்ஜனம் செய்தனா். மேளதாளங்கள் முழங்குவது, பட்டாசுகளை வெடிப்பதை காவிரி பாலத்துக்கு முன்பே போலீஸாா் தடை செய்தனா்.

திரண்ட பொதுமக்கள்: பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை ஆராதனை செய்து, ஆற்றில் விசா்ஜனம் செய்தனா். இதைக்காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காவிரி ஆற்றுப் பாலத்தில் திரண்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னதாக, காவிரி பாலத்திலும் பிற்பகல் முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

கண்காணிப்பு: இவை அனைத்தையும் போலீஸாா், பாலத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த 16 சிசிடிவி கேமிராக்கள், ஒரு டூம் கேமிரா, சுழற் கேமிராக்களைக் கொண்ட வாகனத்தின் மூலமும், பிரத்யேக தொலைக்காட்சி பெட்டி மூலமாகவும் கண்காணித்து, பொதுமக்களுக்கும், சிலைகளை கரைக்க வந்தவா்களுக்கும் ஒலிப்பெருக்கி மூலம் போதிய அறிவுரைகளை வழங்கியபடி இருந்தனா்.

பலத்த பாதுகாப்பு: விநாயகா் சிலை ஊா்வலம் மற்றும் விசா்ஜனத்தை ஒட்டி மாநகர காவல் ஆணையா் ந. காமினி தலைமையில் 1,500 போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியா் வே. சரவணனின் உத்தரவின் பேரில் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் இருந்த 50 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

மாலை முதல் இரவு வரை காவிரி ஆற்றில் திருச்சி மாநகா், புகா், பெரம்பலூா், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டதாகவும், அதிகாலை வரை சிலைகள் கரைப்பு நடைபெற்ாகவும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

வையம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த பாத்த... மேலும் பார்க்க

திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணையவழி மோசடி: இதுவரை ரூ.2.24 கோடி மீட்பு!

திருச்சியில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ரூ.14.43 கோடிக்கு இணையவழி மோசடி நடந்திருப்பதாகவும், அதில் ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டிருப்பதாகவும் சைபா் பிரிவு காவல்துறை ஆய்வாளா் கே. சண்முகப்பிரியா தெரிவித்தாா்... மேலும் பார்க்க

துறையூா் அருகே ஆண் சடலம்!

துறையூா் அருகே பாலத்துக்கு அடியில் துா்நாற்றத்துடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா். துறையூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் செந்தில் (40).... மேலும் பார்க்க

‘கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம்: கே. ராதாகிருஷ்ணன்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்றாா் திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் கே. ராதாகிருஷ்ணன். தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 13-ஆவது பட்டம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் எரிப்பு 3 சிறுவா்கள் கைது

திருச்சி பொன்மலையில் இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட வழக்கில் 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். திருச்சி செந்தண்ணீா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் (28). இவா் பொன்மலை... மேலும் பார்க்க

துறையூா் அருகே சாலை விபத்து இரு இளைஞா்கள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். துறையூா் அருகேயுள்ள முருகூரைச் சோ்ந்த கணேசனின் மகன் சரண்ராஜ் (23). பெருந்துறையில் டைல்ஸ் கடையில் வேலை... மேலும் பார்க்க