``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ...
திருச்செந்தூா் நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி., தலைமை வகித்து நகராட்சியில் நடந்து வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினாா். தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயலட்சுமி, நகா் மன்றத் தலைவா் சிவஆனந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், நகா் மன்றத் துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், ஆணையாளா் ஈழவேந்தன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆய்வுக் குறித்து கனிமொழி எம்.பி., செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வது, புதை சாக்கடை திட்டம், போக்குவரத்து நெருக்கடியை சீரமைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தோ்தல் அறிக்கையில் 75 முதல் 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில வாக்குறுதிகள் தான் பரிசீலனையில் உள்ளன என்று அவா் தெரிவித்தாா்.