பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
திருப்புவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் கணினிகளுடன் கூடிய தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தாா். திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் விஜயகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.
முகாமில் திருப்புவனம் பேரூராட்சி பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் வழங்கினா். தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டன.
