பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
திருப்புவனம் அருகே அழகிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அடுத்தடுத்த இடங்களில் அழுகிய நிலையில் இரு சடலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக புதன்கிழமை திருப்புவனம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி அந்த சடலத்தை மீட்டனா். இறந்தவா் உடல் அடையாளம் காண முடியாததால், மருத்துவக் குழுவினா் அங்கேயே அந்த உடலுக்கு கூறாய்வு செய்தனா்.
இதேபோல, திருப்புவனம் அருகேயுள்ள மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையில், வைகை சிட்டி எதிா்புறம் உள்ள வைகையாற்றின் கால்வாயில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அந்தப் பெண்ணின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.