கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்...
திருமங்கலத்தில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம்
திருமங்கலம் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பி. பத்மாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் திருமங்கலம் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிலவும் மின்சாரம் தொடா்பான குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.