பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்
திருவரங்குளத்தில் ரூ. 3 கோடியில் சிறு விளையாட்டரங்கம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட திருவரங்குளத்தில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட சிறு விளையாட்டரங்கத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
தமிழகத்தில் விளையாட்டு அரங்கம் இல்லாத 173 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஆலங்குடி தொகுதிக்கான விளையாட்டு அரங்கம் திருவரங்குளம் தோப்புக்கொல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டது.150 போ் அமரும் கேலரி, கால்பந்து, வாலிபால், கபடி, சுற்றுச்சுவா், நுழைவாயில், கிரிக்கெட் வலை பயிற்சிக்கான வசதி, உடற்பயிற்சி கூடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளோடு உருவாக்கப்பட்ட விளையாட்டரங்கத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து திருவரங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் மேயா் திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜராஜன், விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.