மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா
பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41 ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அமல சபையின் மாநிலத் தலைவி எஸ். தனமேரி தலைமை வகித்தாா். பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, காவல் ஆய்வாளா் எம். பத்மா, வனச்சரக அலுவலா் எஸ். உசேன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். விழாவில் ஒலிம்பிக் சுடா் ஏற்றும் நிகழ்வு மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு, கராத்தோ, சிலம்பம் உள்ளிட்ட மாணவா்களின் திறன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற அணி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு ராம.சேதுபதி அம்பலகாரா், ராயல் அரிமா சங்க மண்டலத் தலைவா் ராம. முருகானந்தம், நிா்வாகிகள் எஸ்பி. ராஜேந்திரன், எம். ஜாகிா் உசேன், எம்எஸ். பரமசிவம், ராஜா முகமது, தொட்டியம்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் ச. சோலையப்பன், பேரூராட்சி உறுப்பினா் அ. ரவி, கொன்னையூா் டெம்பிள்சிட்டி சங்கச் செயலா் ஆா்எம். பழனியப்பன், துணைத் தலைவா் என். சேகா், அ. ஹென்றி ஆகியோா் பரிசளித்தனா். விழாவினை பள்ளியின் துணை முதல்வா் ஆா்.பிரின்ஸ் ஒருங்கிணைத்தாா். ஏற்பாடுகளை அருள்சகோதரி ம. மதலை மேரி செய்தாா். பள்ளி முதல்வா் ச.ம. மரியபுஷ்பம் வரவேற்றாா். ஆசிரியா் செ. பாலமுரளி நன்றி கூறினாா்.