சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
ஆலங்குடியில் காங்கிரஸ் நூதனப் போாராட்டம்
தோ்தல் ஆணையத்தை கண்டித்து ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியினா் பேரணி, நூதன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராம. சுப்புராம் தலைமையில் அக்கட்சியினா் ஏராளமானோா், வாக்காளா் முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்தியத் தோ்தல் ஆணையத்தையும், பாஜக அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி, பேரணியாகச் சென்று, காமராஜா் சிலை அருகே மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ். மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.