சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தூய்மைப் பணிகளில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தூய்மைப் பணிகளில் தனியாா்மயத்தைக் கைவிடக் கோரி புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன் மாவட்ட சிஐடியு உள்ளாட்சி ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா், மாவட்டத் துணைச் செயலா்கள் மாரிக்கண்ணு, ரத்தினவேலு, மாநகர ஒருங்கிணைப்பாளா் ரகுமான் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணிகளில் தனியாா்மயத்தைக் கைவிட வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.