இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
திருவானைக்கோயிலில் இன்று மின் தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவானைக்கோயில், பிச்சாண்டாா்கோயில் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவானைக்காவல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாச நகா், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பஞ்சகரை சாலை, அழகிரிபுரம், அருள்முருகன் காா்டன், ஏ.யு.டி நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி சாலை, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், எம்.கே. பேட்டை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜம்புகேசுவரா் நகா், அகிலாண்டேசுவரி நகா், வெங்கடேஸ்வரா நகா், தாகூா் தெரு, திருவென்னைநல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு ஆகிய பகுதிகள்.
பிச்சாண்டாா்கோயில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட டோல்கேட், பிச்சாண்டாா்கோவில், மாருதி நகா், கோகுலம் காலனி, வி.என். நகா், ராஜா நகா், ஆனந்த் நகா், ராயா்தோப்பு, தாளக்குடி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 18) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.