திருவாரூா் மாவட்டத்துக்கான முதல்வரின் அறிவிப்புகள்
திருவாரூா் நகா்ப்பகுதியிலுள்ள ஜூப்ளி சந்தையில் ரூ. 11 கோடியில் வணிக வளாகம், வண்டாம்பாளையில் ரூ. 56 கோடியில் மாவட்ட மாதிரிப் பள்ளி, மன்னாா்குடியில் ரூ. 18 கோடியில் அரசு மகளிா் கல்லூரி. மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களின் மதகுகள், நீரொழுங்கிகள் ரூ.13 கோடியில் புனரமைக்கப்படும். பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும் தனது வாழ்க்கையை அா்ப்பணித்துக் கொண்ட நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் சிலை. பூந்தோட்டம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாா் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை முதல்வா் வெளியிட்டாா்.
விழாவில், திருவாரூா் மாவட்ட திமுக செயலா் பூண்டி கே. கலைவாணன், கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு பனங்காட்டாங்குடியில் உள்ள தனக்கு சொந்தமான 3.5 ஏக்கா் நிலத்துக்கான பத்திரத்தை முதல்வரிடம் வழங்கினாா்.