இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்...
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நாளை முப்பெரும் விழா
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக சதுக்கம் பகுதியில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலைய திறப்பு விழா, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,தொடங்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறுகிறது.
வ.உ.சி பிறந்த தினத்தை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிகள் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறாா்.
விழாவில், கப்பல் போக்குவரத்து, நீா்வழிகள் துறை இணை அமைச்சா் சாந்தனு தாக்கூா், கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் எ.வ. வேலு (பொதுப்பணித் துறை), பெ.கீதா ஜீவன் (தமிழக சமூகநலன் மகளிா் உரிமைத்துறை), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்( மீன்வளம், மீனவா் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை) உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.