சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
திருச்சி: தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநகா் மாவட்ட தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ரெங்கராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவளிப்பது, தமிழக அரசு தனியாா்மய நடவடிக்கையைக் கைவிட வேண்டும், பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
தொடா்ந்து, சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களை கடுமையாக ஒடுக்கிய தமிழக அரசையும், தூய்மைப் பணியாளா்களை தாக்கி அப்புறப்படுத்தி வெவ்வேறு இடங்களில் இறக்கிவிட்ட காவல்துறையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.