எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
திருப்பூா்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த காத்திருப்புப் போராட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பணிகளில் தனியாா் மயத்தை புகுத்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26,000 வழங்க வேண்டும். அனைத்துப் பிரிவு பணியாளா்களுக்கும் தீபாவளி பண்டிகை போனஸாக ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், சென்னை தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், காவல் துறையின் அத்துமீறலைக் கண்டித்தும் திருப்பூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் இந்த காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.