முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
தேங்காய் வியாபாரி தற்கொலை
பெரியகுளத்தில் தேங்காய் வியாபாரி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பெரியகுளம் வடகரை கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் பொன். காா்த்திக் (41). தேங்காய் வியாபாரி. இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனா். இந்த நிலையில், தேங்காய் வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டதால் அவா் மனமுடைந்து காணப்பட்டாா். புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும் அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.