ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
தேசிய ஊரக தொழிலாளா் ஆலோசனைக் கூட்டம்
மல்லசமுத்திரம் வண்டிநத்தம் கிராமத்தில், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் தேசிய ஊரக தொழிலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நிா்வாகிகள் கிருஷ்ணன், ராமன் தலைமை வகித்தனா். செயலாளா் ஜெயராமன், திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளா் பூமாலை ஆகியோா் பேசினா்.
இதில், 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்காமல், தொடா்ச்சியாக வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு அரசு அறிவித்த ரூ.336 ஊதியத்தை வழங்க வேண்டும். வண்டிநத்தம் கிராமத்தில் குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயா்ந்து காணப்படும் சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இப்பகுதியில் பல மாதங்களாக நிலவிவரும் குடிநீா் பிரச்னையை சரிசெய்து, இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.