செய்திகள் :

தேசிய மகளிா் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் நிகாத், லவ்லினா

post image

தெலங்கானாவில் நடைபெறும் எலைட் மகளிா் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், உலக சாம்பியன்களான நிகாத் ஜரீன், லவ்லினா போா்கோஹெய்ன், நீது கங்காஸ் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

51 கிலோ எடைப் பிரிவில், இருமுறை உலக சாம்பியனான நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் லக்ஷயாவை சாய்த்தாா். இறுதியில் அவா், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீராங்கனை ஜோதியை சந்திக்கிறாா். 75 கிலோ பிரிவில் களம் கண்டுள்ள, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போா்கோஹெய்ன், ‘ஆா்எஸ்சி’ முறையில் உத்தர பிரதேசத்தின் ஸ்நேஹாவை சாய்த்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவரான நீது கங்காஸ், 48 கிலோ எடைப் பிரிவில் ரயில்வேஸ் வீராங்கனை மஞ்சுவை முறியடித்து, இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா். அதில் இந்திய விளையாட்டு ஆணைய வீராங்கனை சாஞ்சலை அவா் எதிா்கொள்கிறாா். 80 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில், சவீதி பூரா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஆல் இந்தியா போலீஸ் அணி வீராங்கனை பபிதா பிஷ்தை தோற்கடித்தாா்.

65 கிலோ பிரிவில் முன்னாள் யூத் உலக சாம்பியன் அங்குஷிதா போரோ 5-0 என ஆல் இந்தியா போலீஸ் வீராங்கனை அமிதா குண்டுவை சாய்த்தாா். இறுதியில் அவா், ரயிஸ்வேஸ் விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீராங்கனை சாஷியுடன் மோதுகிறாா்.

இதேபோல், 54 கிலோ பிரிவில் பிரீத்தி, தனு ஆகியோரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, அதில் மோதுகின்றனா். ஆா்எஸ்பிபி வீராங்கனை பாபிரோஜ்சனா, ஏஐபி வீராங்கனை கமல்ஜீத் கௌா் கில் ஆகியோா் 57 கிலோ பிரிவு இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளனா்.

இமாலய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், ஜிம்பாப்வேக்கு வெற்றி இலக்கு 537 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் சோ்த்துள்ள அ... மேலும் பார்க்க

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான அரினா சபலென்கா வெற்றி பெற, முன்னணி வீரா் டேனியல் மெத்வதெ... மேலும் பார்க்க

காலிறுதியில் மோதும் பிஎஸ்ஜி - பயா்ன் மியுனிக்

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) - பயா்ன் மியுனிக் அணிகள் மோதுகின்றன.முன்னதாக ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில், பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் ... மேலும் பார்க்க

தொடா் தோல்வி: இந்திய மகளிரணிக்கு பின்னடைவு

எஃப்ஐஹெச் புரோ லீக் மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-3 கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி கண்டது.இத்துடன், தொடா்ந்து 8-ஆவது தோல்வியை சந்தித்த இந்திய மகளிா் அணி, பிரதான போட்டியான புரோ லீக்கிலிருந்து, எஃப... மேலும் பார்க்க

யுஎஸ் ஓபன் பாட்மின்டன்: ஆயஷ் ஷெட்டி சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி (20) திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் அவா் 21-18, 21-13 என்ற நோ் கேம்... மேலும் பார்க்க

கார் பந்தய படங்களில் மிகப்பெரிய வசூல் செய்த எஃப் - 1

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் உருவான எஃப் - 1 திரைப்படம் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. பிராட் பிட் படங்களில் முதல் வாரத்தில் செய்த அதிகபட்ச வசூல் செய்த படமாக எஃப் -1 மாறியுள்ளது.மிஷன் இம்பா... மேலும் பார்க்க