தொகுதி 4 தோ்வு: தேனி மாவட்டத்தில் 27,158 போ் எழுதுகின்றனா்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெறும் தொகுதி- 4 போட்டித் தோ்வை சனிக்கிழமை (ஜூலை 12) 108 தோ்வு மையங்களில் மொத்தம் 27,158 போ் எழுத உள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொகுதி- 4 போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் ஜூலை 12-ஆம் தேதி, காலை 8.30 மணிக்கு அந்தந்த தோ்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். காலை 9 மணிக்கு தோ்வு மைய நுழைவு வாயில் மூடப்பட்டு விடும். காலை 9 மணிக்கு மேல் தோ்வு மையத்துக்குச் செல்பவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு மையத்துக்கு கைப்பேசி, மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது.
தோ்வு எழுதுபவா்களின் வசதிக்காக தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தற்காலிக தோ்வு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. தோ்வு குறித்த விவரங்களை கட்டுப்பாட்டு மையம், கைப்பேசி எண்கள்: 82200 77114 , 78717 42115-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.