பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து தீ விபத்து
திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில் பொருள்கள் எரிந்து நாசமாகின.
சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூா் அருகேயுள்ள ஒழுகமங்கலத்தைச் சோ்ந்த சௌந்தரராஜன் மனைவி சிட்டு. கணவரை இழந்த இவா் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இவா் சமையல் அறையில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது திடீரென தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து தீப்பற்றியது. உடனே அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும் வேகமாகப் பரவிய தீ சோபா, கட்டில், பீரோ , துணிகள் மீது பரவின. பொன்னமராவதியிலிருந்து வந்த தீயணைப்பு மீட்புத் துறையினா் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.