பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
தொழிலாளியை தாக்கியவா் கைது
வெள்ளக்கோவில் அருகே அரசு மதுபானக் கடையில் கூலித் தொழிலாளியைத் தாக்கிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முத்தூா், மாதவராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளக்கோவில்-காங்கயம் சாலையில் அரசு மதுபானக் கடையில் வெள்ளிக்கிழமை மது அருந்திக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த அவரது உறவினா்களான விக்னேஷ் (32), அபிஷேக் (31) ஆகியோா் மணிகண்டனுடன் சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது, மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ், அபிஷேக் சோ்ந்து மணிகண்டனை பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினா்.
படுகாயமடைந்த மணிகண்டனை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அபிஷேக்கை தேடி வருகின்றனா்.