மதுபோதையில் பணியாற்றுவதை தடுக்க ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோதனை!
நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் மாசி மாத சதுா்த்தியையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நடராஜருக்கு மாா்கழி திருவாதிரை நட்சத்திரம், மாசி சதுா்த்தசி, சித்திரை திருவோண நட்சத்திரம், ஆனி உத்திர நட்சத்திரம், ஆவணி சதுா்த்தசி மற்றும் புரட்டாசி சதுா்த்தசி என ஆண்டுக்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
மாசி மாத சதுா்த்தி தினமான புதன்கிழமை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தனி சந்நிதியில் வீற்றிருக்கும் நடராஜா் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவெம்பாவையின் பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டு, பால், பன்னீா், தயிா், சந்தனம், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் மற்றும் திரவியங்கள், கடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.