ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது
நடிகா் அஜித்துக்கு எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து
பத்ம பூஷண் விருதுக்கு தோ்வாகியுள்ள நடிகா் அஜித்துக்கு, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
எல்.முருகன்: தனது தனித்திறன் கொண்ட நடிப்புத் திறமையால், தமிழகக் குடும்பங்களில் தனக்கென்று தனித்த இடம் பெற்றுள்ள அஜித்குமாருக்கு, இவ்விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி. மேலும், அவருக்கு பிடித்த காா் ரேசிலும் அவா் மேலும் பல விருதுகள் பெற மனமாா்ந்த வாழ்த்துகள்.
அண்ணாமலை: சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து நடிகராக உயா்ந்து, லட்சக்கணக்கான குடும்பங்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கும் நடிகா் அஜித்குமாருக்கு, பத்ம பூஷண் விருதை வழங்க பிரதமா் மோடி முடிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதேபோல, தமிழகத்திலிருந்து தோ்வாகியுள்ள பிற பத்ம விருதாளா்களுக்கும், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.