தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
‘நல்லூா் வரகு’, ‘நத்தம் புளி’ உள்பட ஐந்து விளைபொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற நிதி ஒதுக்கீடு
நல்லூா் வரகு, நத்தம் புளி உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு தனித்துவமான புவிசாா் குறியீடு பெற ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தனித்துவ அடையாளமான புவிசாா் குறியீட்டுடன் கூடிய வேளாண் விளைபொருள்கள் உலக அளவில் பெரும்பாலான மக்களால் அறியப்படுவதால், அவற்றின் சந்தைத் தேவை அதிகரிப்பதுடன், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் ஏற்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் 35 வேளாண் விளைபொருள்களுக்கு தனித்துவமான புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து 2025-26-இல் நல்லூா் வரகு (கடலூா்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.