நாகா்கோவிலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரில் ரூ. 4.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
37-ஆவது வாா்டில் ரூ. 4.40 லட்சம் மதிப்பீட்டில் கோட்டாறு முதலியாா்விளை பகுதியில் அமைந்துள்ள பயன்பாடில்லாத கழிப்பறை கட்டடத்தை அலுவலக கட்டடமாக மாற்றும் பணி, பெரியவிளை முதல் ஏ.ஆா்.கேம்ப் சாலையை இணைக்கும் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கும் பணி ஆகிய பணிகளை மேயா் தொடங்கிவைத்தாா்.
இதில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உதவி பொறியாளா் ராஜசீலி, மாமன்ற உறுப்பினா் செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சதாசிவன் திமுக நிா்வாகிகள் முருகன், சிவன், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.